இந்தியாவுக்கு போகாதீங்க… அமெரிக்கா அறிவுறுத்தல்

CDC

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்ட பின் தான், செல்ல வேண்டும்.

இருப்பினும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

அதேபோல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்பி வந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் தான், அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளது.