அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்ட மரண தண்டனை!

ஒக்லஹோமாவை மாகாணத்தை சேர்ந்த டேனியல் லூயிஸ் லீ என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதில் என்ன ஆச்சர்யம் என நினைக்கலாம். ஆனால் அது அரபு நாடுகளிலோ மற்ற நாடுகளிலோ சர்வசாதாரணம் ஆனால் அமெரிக்காவில் 17 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட மரண தண்டனை வழங்கவில்லையாம்..

Daniel Lewis Lee

குற்றவாளி டேனியலுக்கு விஷ ஊசி செலுத்தி தண்டனையை நிறைவேற்ற நேற்று தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் டேனியலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் டேனியலின் தண்டனையை நேரில் பார்க்க கொரோனா பரவலை காரணம் காட்டி வர தயங்கியதால் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட இண்டியானா நீதிமன்றம் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ஆனால் இந்த உத்தரவை அமெரிக்க அரசு, மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி, இண்டியானா நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் கொலை குற்றவாளி டேனியலின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.