அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா நெகட்டிவ்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நடத்தப்பட்ட மறுபரிசோதனையில், முடிவு நெகட்டிவ் என வந்ததாக வெள்ளை மாளிகை முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடைபெறவிருகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஒன்றாம் தேதி உறுதியானது.

முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ட்ரம்ப், காய்ச்சல் அதிகமானதால், மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் இருந்த போது ட்ரம்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்ஸிஜன் தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

Trump’s

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாட்‌களுக்கு பிறகு, அவர் கொரோனா தொற்றிலி‌ருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்புக்கு அதிவிரைவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர் சீன் கான்லே தெரிவித்துள்ளார். ஆனால் ட்ரம்புக்கு எப்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஒருவேளை ட்ரம்ப் பரப்புரைக்கு செல்ல வேண்டுமென அவசர அவசரமாக மறு பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய போதும் ட்ரம்ப் மாஸ்க் போட மறுக்கிறார் என்பது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் நோய் பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற இரு அமெரிக்கர்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter