கருப்பின இளைஞர் சுடப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மல்லுக்கட்டும் ட்ரம்ப்!

Protest

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் சுடப்பட்டதால் பதற்றமாக இருக்கும் கெனோஷா நகரை பார்வையிட இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. இந்நிலையில் வின்கான்ஸின் மாகாணத்தில் உள்ள கெனோஷா நகரில் கடந்த 23 ஆம் தேதி ஜேகப் பிளேக் என்ற கருப்பின இளைஞரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இத்தகவல் அறிந்ததும்பொதுமக்கள் அங்கு திரண்டு காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஜேகப் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பரவியதும், கெனோஷா நகரில் போராட்டம் வெடித்தது. மக்கள் சாலையில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருப்பினருக்கு எதிராக பாகுப்பாடு காட்டும் காவல்துறையினரின் இந்த செயலை கண்டித்து கெனோஷா நகரில் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு பதற்றம் நீடித்துவரும் நிலையில்,கெனோஷா நகரை பார்வையிட இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அங்கு செல்லும் அவர், போராட்டங்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிவார் என சொல்லப்படுகிறது. முன்னதாக கருப்பின இளைஞருக்கு நீதிக்கேட்டு போராடுபவர்களை அதிபர் ட்ரம்ப் திருடர்கள்  என்றும், வேலை இல்லாதவர்கள் என்றும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
http://- https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa