புத்தராக அவதாரம் எடுத்துள்ள ட்ரம்ப்!

முன்னாள் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் புத்தர் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சீன ஆன்லைன் தளமான டாவோபாவில் (Taobao) ட்ரம்ப் புத்தரை போன்று இருக்கும் சிலை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

பீங்கானால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை இரண்டு அளவுகளில் கிடைக்கிறது, 4.6 மீட்டர் அளவு கொண்ட பெரிய சிலை ரூ. 44,707க்கும், 1.6 மீட்டர் சிறிய அளவு சிலை ரூ .11,168க்கும் விற்பனையாகியுள்ளது.

Trump-Buddha statue

கண்களை மூடிக்கொண்டு, முகத்தைத் தாழ்த்தி, கைகளை மடியில் ஒன்றாக வைத்துக்கொண்டு, ட்ரம்ப் சிலை அமைதியான ஒளி வீசுகிறது

எப்போதும் பிடிவாதம் பிடித்து கொண்டிருக்கும் ட்ரம்ப், அமைதியாக தியான நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரம்பின் சிலையை உங்கள் அலுவலகத்தில் வைத்தால் உங்கள் நிறுவனம் நன்கு வளர்ச்சியடையும் என ட்ரம்பின் புத்தர் சிலையின் தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் வேடிக்கையாக ட்ரம்ப்பின் புத்தர் சிலையை வாங்கி மகிழ்கின்றனர்.