அமெரிக்க உணவகங்களில் மலைப்பாம்பு அறிமுகம்!

burmese python

அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் மலைப்பாம்பை உணவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புளோரிடா மாகணத்திலுள்ள உணவகங்களிலுள்ள மெனு கார்டுகளில் தற்போது  பர்மிய மலைப்பாம்பும் (Burmese Python) இடம் பிடித்துள்ளது. காரணம் மலைப்பாம்புகள் வனத்திலுள்ள மற்ற விலங்குகளை பெருமளவு சாப்பிட்டு விடுவதால் இயற்கை சமநிலை கடுமையாக பாதிக்கப்படுவதாக உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காகவே அமெரிக்காவிலுள்ள உணவகங்களில் மலைப்பாம்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மலைப்பாம்பு இறைச்சிகளில் பாதரசம் இருப்பதால் அதனை மனிதர்கள் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுமோ என்ற ஆய்வும் ஒரு பக்கம் நடைபெற்றுவருகிறது. இதற்காக 6 ஆயிரம் மலைப்பாம்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சில பகுதிகளில் ஏற்கனவே மலைப்பாம்பு இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஒரு பவுண்டு மலை பாம்பு மாமிசத்தை 50 டாலர்கள் கொடுத்து வாங்கும் அமெரிக்க மக்கள், அதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.

Florida wildlife officials say a 'milestone' 5,000 Burmese pythons have now been removed | Blogs

புளோரிடா மீன், வனவிலங்குப் பாதுகாப்பு ஆணையமும் சுகாதார அமைச்சும் இணைந்து மலைப்பாம்புகள் உண்பதற்குப் பாதுகாப்பானவையா என்பதைக் கண்டறியும் பணியில் இறங்கியுள்ளன.

மலைப்பாம்புகள் அடர்ந்த வனப்பகுதகள் மற்றும் மழைக்காடுகளில்தான் அதிகமாக வாழ்கின்றன. ராட்சத மலைப்பாம்புகள் பொதுவாக மான்கள், காட்டுப் பன்றிகள், முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டவை. அதனால் விழுங்கப்பட்ட உணவு செரிமானம் ஆக பல வாரங்களோ, மாதங்களோ ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதனால், மலைப்பாம்புகள் பல நாட்கள் உணவின்றி வாழும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: புதிய உச்சம்! ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா…

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter