9 மாத சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவிலிருந்து மீண்ட பெண்!

corona patient

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்து 164 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,97,001 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 9 மாத சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண்

மேலும், நேற்று ஒரேநாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை ஒரு கோடி 58 லட்சத்து 40ஆயிரத்து 714 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிவந்த ரோசா பிலிப், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார்.

அதனால் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர், பணிபுரிந்துவந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. அதனால் ரோசாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இருப்பினும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவர்களின் விடா முயற்சியாலும், ரோசாவின் தன்னம்பிக்கையாலும் 9 மாத சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஏலியன்களுடன் அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம்?!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter