அமெரிக்காவில் 14 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்பாடுடன் இருந்து கட்டுப்படுத்திய அமெரிக்காவில், சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பி வருகின்றனர்.

அதன் காரணமாக ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாசங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதை ஒரு விழாவாக் கொண்டாடிய திரைத்துறையினர், ‘மீண்டும் பெரிய திரை’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் விரைவில் ரிலீஸாகவுள்ள படங்களின் டிரைலர்கள் அதில் ரிலீஸாகின.

உலக சினிமா வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஹாலிவுட் கொரோனா தொற்றால் இந்த 14 மாதங்களில் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது.