அமெரிக்காவில் இந்திய அமெரிக்கருக்கு கிடைத்த கவுரவம்!

அமெரிக்க நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோகித் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், அமெரிக்காவின் நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோகித் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரோகித் இந்த பதவியில் நீடிப்பார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் ரோகித் அந்த நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரியத்தின் உதவி இயக்குனராக இருந்தார்.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து மத்திய வர்த்தக கமிஷனராகவும் ரோகித் பணியாற்றி வந்துள்ளார். அமெரிக்க கல்வி துறையின் சிறப்பு ஆலோசகராகவும் ரோகித் பதவி வகித்தது குறிப்பிடதக்கது.