அமெரிக்கரை ஆச்சர்யப்படவைத்த இந்தியரின் நேர்மை!

Indian-Origin

அமெரிக்காவில் அடுத்தவரின் லாட்டரியில் விழுந்த பணத்திற்கு ஆசைப்படாமல் அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்த இந்திய வம்சாவளியினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மாசசூசெட்ஸ் நகரில் இந்திய வம்சாவளி அருணா நடத்திவரும் லாட்டரி கடையில், லியா ரோஸ் என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

ஒருநாள் எதிர்பாராத விதமாக அவரது நம்பருக்கு 7 கோடியே 27 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

ஆனால் அதனை சரியாக ஸ்கிராட்ச் செய்து அந்த எண்களை பார்க்காத லியா லாட்டரி சீட்டை கடையிலேயே தூக்கி எரிந்துவிட்டு சென்றுள்ளார்.

Indian-Origin Family In US Returns $1 Million Ticket To Woman Who Threw It Away

அதனை 10 நாட்களுக்கு பின் குப்பையிலிருந்து எடுத்த அருணாவின் மகன் அபிஷா, அந்த நம்பருக்கு பரிசு விழுந்ததை அறிந்துகொண்டார்.

இருப்பினும் அதற்கு அசைப்படாமல் அந்த தொகையை லியாவிடம் ஒப்படைத்தார்.

லியா அபிஷாவுக்கு நன்றி கூறியதுடன், அவரது நேர்மைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அமெரிக்கரிடமிருந்து நேர்மைக்காக பாராட்டு பெற்ற இந்தியரின் செயல் ஆச்சர்யப்படவைக்கிறது.

அபிஷாவுக்கு டெஸ்லா கார் வேண்டுமென்பது மிகவும் ஆசை. ஆதலால் அந்த பணத்தை திருப்பி கொடுப்பதில் இரு மனதாக இருந்துள்ளார் அபிஷா.

ஆனால் இந்தியாவிலிருந்து போன் செய்த அவரது தாத்தா, பாட்டி, நமக்கு அடுத்தவர் பணம் தேவையில்லை.

அதற்கு ஆசைப்பட கூடாது என அறிவுறுத்தியதையடுத்து அபிஷா அந்தபணத்தை லியாவிடம் கொண்டு சேர்த்தார்.