தமிழர்களுக்கு கிடைத்த உயரிய பதவி!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பிரிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் குழுவில் சென்னையில் பிறந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து எம்பியாக இருந்துவருகிறார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி

பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பிரமிளா ஆவார். இவரின் முயற்சியால் அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் 15 டாலர்கள் ஊதியம் தர வேண்டுமெனும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல் கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவில் 74 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவின் தலைவர் கிளைபர்ன் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், கொரோனா வைரசை தோற்கடித்து நமது பொருளாதாரத்தை கட்டமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதுபோன்று பைடன் அமைச்சரவையில் ஏராளமான இந்திய வம்சாவளிகள் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் புதிதாக 1.15 லட்சம் பேருக்கு கொரோனா!