பணி விசா வழங்க காலதாமதம்; அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் மீது இந்திய வம்சாவளி வழக்கு

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளியான ரஞ்சிதா சுப்பிரமண்யா அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை பிரிவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பல இந்திய குடும்பங்கள் தத்தளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையில் கொரோனா வைரஸ் நெருக்கடி வேற, இந்த ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்ல முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. அதன்பிறகு சென்றால் வேலை இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் தோன்றுகிறது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வேலை, நிதி பிரச்னை, சுகாதார அச்சுறுத்தல் இப்படி பல பிரச்னைகளால் சிக்கித்தவித்துவருகின்றன.

இந்நிலையில் தனக்கு ஹெச் 1 பி எனும் பணி விசா வழங்க காலதாமதம் ஆக்குவதாக கூறி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை பிரிவிற்கு எதிராக, இந்தியா வம்சாவளி ரஞ்சிதா சுப்பிரமண்யா அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை பிரிவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ரஞ்சிதாவின் விண்ணப்பத்திற்கு, கடந்த ஏப்ரல், 7ம் தேதி, ஒப்புதல் வழங்கப்பட்டும், இதுவரை, அதற்கான அங்கீகார அட்டை அவருக்கு வந்து சேரவில்லை என்றும் அவருடைய வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.ஆகஸ்ட் 9, 2020 க்குள் வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்கான ஆதாரத்தை வழங்காவிட்டால், அவர் தனது வேலையை இழக்க நேரிடும் என்றும் ரஞ்சிதா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa