2020 ஆண்டுக்கான சிறந்த நபர்களாக பைடனும், கமலாஹாரிஸும் தேர்வு

Biden_Harris

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸும், டைம்ஸ் இதழின் 2020 ஆண்டுக்கான சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல டைம்ஸ் இதழ் 1927ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து அட்டை படத்தில் கெளரவிக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து டைம்ஸ் இதழின் அட்டைப் படத்தில் இருவரின் புகைப்படங்களுடன், “‘Changing American’s History’ என குறிப்பிட்டு கெளரவப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள் என டைம்ஸ் இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்கள் பட்டியலில், அதிபர் ட்ரம்ப், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிக்குழுவின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவரான ஆன்டனி பாசி மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

latest tamil news

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் முதல் ஆசிய பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

55 வயதாகும் கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரமாகும். இவர் வழக்கறிஞராவார்.

மேலும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரரான லெப்ரோன் ஜேம்ஸ், இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, ‘பிடிஎஸ்’ எனும் எழுவர் அடங்கிய கொரிய பாப் இசைக் குழு ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

இதையும் படிக்கலாமே: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter