அமெரிக்காவின் நாடித்துடிப்பு ஜனநாயகம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது: ஜோ பைடன்

Joe biden

பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்கா இணையும் என அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில் பைடனின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

இன்னும் 77 நாட்களில் அதாவது புதிய அதிபர் பதவியேற்பு நாளில் பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணையும் என பைடன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு கையெழுத்திட்டிருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தங்கள் நாட்டுக்கு நன்மையை விட தீமையே அதிகம் எனக் கூறி அதிலிருந்து விலகுவதாக ஒபாமாவை அடுத்து வந்த ட்ரம்ப் அறிவித்தார்.

தற்போது மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணையும் என அதிபர் தேர்தலில் முன்னணியில் உள்ள ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நாடித்துடிப்பு ஜனநாயகம்தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருப்பதாக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டெலாவேர் மாநிலத்தில் ஆதரவாளர்களை சந்தித்து பேசிய அவர், தொற்றுநோயை எதிர்கொண்டாலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குடிமக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும், தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு தேவையான வாக்குகள் தங்களுக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறினார்.

கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்கா, ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான பாதை தெளிவாக உள்ளது என்று ஜோ பைடன் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்திய வம்சாவளியினர் 4 பேர் மற்றும் திருநங்கை அமெரிக்க எம்பிக்களாக தேர்வு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter