இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் பைடன்!

Joe Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் இந்திய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Joe Biden extended the wishes on Twitter. (Reuters File Photo )

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் எனது மனைவி ஜில் பைடனும்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் பேசும் மக்களுக்கு விஷூ புத்தாண்டு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள இந்தியர்கள் அனைவரும் புத்தாண்டை அவரவர் மொழி, பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தின்படி கொண்டாடிவருகின்றனர். தமிழர்கள் தமிழ் புத்தாண்டு என்ற பெயரிலும், கேரள மக்கள் விசு பண்டிகை என்ற பெயரிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு மங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று புதன்கிழமை பிறந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் வந்து செல்லும் திருவிழா காலங்களும், பண்டிகைகளும் நம் ஒற்றுமையோடு அனைத்தையும் எதிர்த்து போராட வேண்டும் என்ற வல்லமையை தருகிறது.