ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்!

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of text that says '25 Feb 2021 micset UNITED STATES OF AMERICA JUST IN Johnson Johnson COVID-1 COVID COVID COVID-19 Coronavirus Vaccine Coronavirus Vaccine Iniection only Coronavirus Vaccine Coronavirus Vaccine Injection only pety oply P:(_T) (MNT ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை அவசர கால சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி.! மேலும் தகவல்களுக்கு TAMIL MICSET tamilmicsetusa/ UNITED STATES OF AMERICA INDIA SINGAPORE MALAYSIA QATAR KUWAIT CANADA UK USA'

இந்த சூழலில்தான் அமெரிக்காவின் பெல்ஜியத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் களமிறங்கியது.

தடுப்பூசியை கண்டுபிடித்து சுமார் 44 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதித்தது. அதில் 66% இந்த தடுப்பூசி செயல்படுவது உறுதியானது.

ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட வெளிநாடுகளில் செலுத்திவரும் அனைத்து தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் போடப்படவேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரே ஒரு டோஸ் போட்டால் போதும்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை செலுத்திய பிறகு, உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் முதிர்ச்சியடையும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அமெரிக்காவின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.