நான் ஒன்றும் தோல்வியடைவில்லை;ஆனால் பைடன் வெற்றிப்பெற்றுவிட்டார்: அதிபர் ட்ரம்ப்

Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாம் எதிலும் தோல்வியடைவுல்லை எனக்கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றார். 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

Donald Trump

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார். ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபராக பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், அதிகார மாற்றத்தை இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைப்பு அழைக்குமாறும் அதிபர் ட்ரம்ப்புக்கு அமெரிக்க அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. பொய்ச்செய்தியை மட்டுமே வழங்கும் ஊடகங்களே, பைடனின் வெற்றியை உறுதிசெய்திருப்பதாகத் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் நடந்த மோசடிகளை ஊடகங்கள் வெளிக்கொணரவில்லை என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் தற்போது அதிபராக முடியுமா? அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts