அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம்! அமைதி காக்க பைடன் வேண்டுகோள்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கும் நிலையில் அதிபர் பதவிக்கு வர அவர் தவறான முறையில் உரிமை கோர கூடாது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆனால் பைடனோ வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதால் அவரே அதிபர் இருக்கையில் அமர்வார் என கணிக்கப்படுகிறது.

இந்த சூழலில் அதிபர் பதவிக்கு வர தவறான முறையில் ஜோ பைடன் உரிமை கோரக்கூடாது என ட்ரம்ப் டிவிட்டரில் எச்சரித்துள்ளார்.

தம்மாலும் அவ்வாறு செய்ய முடியும் என கூறியுள்ள ட்ரம்ப், தேர்தல் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து வாக்குகளையும் வெளிப்படையாக எண்ண வேண்டும் என கூறுவதற்கு அமெரிக்க மக்களுக்கு உரிமை இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Joe biden-Trump

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “நேரம் நெருங்க நெருங்க வெற்றி உறுதியாகி வருகிறது.

7கோடியே 40 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளேன். அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் பெறாத வாக்குகளை பெற்றுள்ளேன்.

அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கும்வரை அமைதியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளாஅர்.

கொரோனாவை விரட்டுவதற்கும் பொருளாதாரத்தை மீட்கவும் அமெரிக்க மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்த பைடன், அழுத்தம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னெப்போதும் இல்லாத அளவாக தபால் வாக்குகள் அதிகளவில் பதிவாகி இருப்பதும், தேர்தல் நாளுக்கு பிறகும் தபால் வாக்குகள் ஏற்கப்படுவதும் வாக்கு எண்ணிக்கை தாமதமாக காரணமாகியுள்ளன.

இதையும் படிக்கலாமே: 2வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter