இந்திய-சீன மக்களின் அமைதிக்காக அனைத்தையும் செய்ய தயார்- அதிபர் ட்ரம்ப்

இந்தியா மற்றும் சீன மக்களின் அமைதிக்காக அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா எல்லை சச்சரவுகள் தொடர்பாக ட்ரம்ப் இந்தியாவிற்கு சாதகமாக பேசி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலர் கேய்லெய் மெக் எனானி இந்தியா, சீனா ஆகிய இருநாட்டு மக்களையும் பிடிக்கும் எனவும், அவர்களின் அமைதிக்கு சாதகமாக அனைத்து செய்ய விரும்புவதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியதாக தெரிவித்தார்.

Donald Trump

அமெரிக்காவின் மிகச் சிறந்த பங்குதாரர் என் அந்நாட்டின் தலைமைச் செயலர் மைக் பாம்பியோவும், இந்திய பிரதமர் மோடியின் சிறந்த நண்பர் என அமெரிக்காவின் பொருளாதார ஆலோசகர் லேரி குட்லோவ் ஆகியோரும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் இந்தியாவுக்கு எதிராக சீனா ஆக்ரோஷமான போக்கை கடைபிடிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் பல்வேறு தரப்பு அதிகாரிகளும் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், ட்ரம்ப் இரு நாட்டு மக்களின் அமைதிக்காகவும் விரும்புவதாக மாறுபட்ட கருத்தை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மெக் எனானியின் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.