அமெரிக்காவில் உள்ள கோயில்களில் இந்திய தலித் தொழிலாளர்களுக்கு கொடுமை?

temple

அமெரிக்காவில் உள்ள ஒரு இந்து கோவிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒரு வழக்குப்பதிவை செய்துள்ளனர். இவர்களில் பலர் பட்டியலினத்தவர்கள்.

அமெரிக்காவில் பல இந்து கோவில்களை கட்டிய அமைப்பு மீது நியூஜெர்சியில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூட்டாட்சியர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அடிமை போன்று நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் உணவு, தங்குமிடம், ஊதியம் கூட வழங்காமல் கொடுமை படுத்தினர் என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கு மே.11 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Worker

இந்தியாவிலிருந்து தன்னார்வலர்கள் என அழைத்து செல்லப்பட்டு அவர்கள் அங்கு கொத்தடிமை போன்று பணியாற்ற வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தொழிலாளர்கள் தரப்பில், டேனியல் என்ற வழக்கறிஞர் வாதாடி வருகிறார்.

ஆனால் தொழிலாளர்களின் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இந்துக்கோயில் கட்டும் பாக்ஸ் மற்றும் ஸ்ரீ சத்திய நாராயணி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இதுபோன்ற ஒரு சம்பங்கள் நடைபெறவில்லை என அங்கு வசிக்கும் இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர்.

அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள்.