கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ! ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் உதவியை நாடும் அமெரிக்கா…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் உதவி நாடப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முடியாத கலிபோர்னியா மாகாண அரசு ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இதுவரை இல்லாத அளவு காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக கலிபோர்னியா மாகாண அரசு கூறியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுவதோடு, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வதைக்கிறது.. கொரோனா ஒருபக்கம் மிரட்ட, மறுபக்கம் காட்டுத்தீ, வாட்டி வதைக்கும் வெயில் என கதறுகிறது கலிஃபோர்னியா, அதாவது 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் அங்கு வாட்டி வதைப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 55 டிகிரி செல்சியஸ் அதாவது 131 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ளது. பாலைவனத்தில் கூட இவ்வளவு வெப்பம் பதிவாகாது என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். கலிபோர்னியாவில் மட்டுமல்லாது சான் பிரான்சிஸ்கோ நகரில் தீ பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயிக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவு நிலங்கள் சேதமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே  காட்டுத் தீயினால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கலிபோர்னியா காட்டுத்தீயை மிகப்பெரிய பேரிடராக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்களும் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.