கொரோனாவுக்கு அமெரிக்க எம்.பி. பலி

luke letlow

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான லூக் லெட்லோ கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஏழை, பணக்காரன், அரசியல்வாதி என்ற எந்த பிரிவினைவாதமும் கொரோனாவுக்கு இல்லை.

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் லூக் லெட் ( 41). இவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானார்.

வரும் ஞாயிறன்று எம்.பி.யாக பதவியேற்க இருந்த லூக்குக்கு திடீரென கடந்த 18 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்.

கடந்த 23ஆம் தேதி லூக்கின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி லூக் உயிரிழந்தார். லூக் லெட்லோ மறைவுக்கு லூசியானா மாகாண ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலிருந்த தனது சொந்த மாநிலமான லூசியானா மாநில மக்களுக்கு சேவை செய்து வந்ததாகவும், முன்னாள் ஆளுநர் பாபி ஜிண்டாலுக்கு திரைக்குப் பின்னால் பணியாற்றியவர் என்றும் ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். லூக் மறைவால் மிகுந்த மன வேதனை அடைவதாக பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெல்லோசி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பைடன் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்தியருக்கு முக்கிய பொறுப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter