அமெரிக்கர்களுக்கே அல்வா கொடுத்த பலே இந்தியர்கள்!

போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பல மில்லியன் டாலர்கள் ஏமாற்றிய இருவரை சைபர் க்ரைம் போலீஸ் கைது செய்துள்ளது

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையின் திறந்த வெளியில் ஒரு போலி கால் சென்டரை சபர்மதிஷா இ ஆலத்தில் வசிக்கும் 30 வயது ரியாஸ் ஷேக்.

அமிரைவாடியின் ஹட்கேஷ்வர் சாலையைச் சேர்ந்த 22 வயது ஸ்வப்னில் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் நடத்தி பல மில்லியன் டாலரை அமெரிக்க குடிமக்களை நூதனமான முறையில் ஏமாற்றியுள்ளனர் .

Man running fake call centre detained | Vadodara News - Times of India

ஷேக் மற்றும் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே வைத்துக்கொண்டு போலியாக ஒரு கால் சென்டர் நடத்துவதாக ஆன்லைனில் விளம்பரம் கொடுத்துள்ளனர் .இதற்கு அட்ரஸ் எதுவென்றால் அந்த ஆற்றங்கரையோரம்தான் .இவர்களின் போலியான கால் சென்டருக்கு ஆபீஸ் கூட போடவில்லை .

ஆனால் லேப்டாப் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் இருக்கும் மாத சம்பளம் வாங்குவோரின் விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு கடன் வேண்டுமா என்று கேட்பார்கள் .இவர்கள் சிறு தொகையினை கடனாக கொடுத்து அதற்கு ஒரு தொகையை வட்டியாக பெறுவதாக விளம்பரம் கொடுத்துள்ளார்கள் .இவர்களிடம் சிக்கும் அமெரிக்கர்களிடம் ப்ராசஸிங் தொகையை முன்பே வாங்கிவிட்டு கடன் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்கள் .

இப்படியாக பல அமெரிக்கர்களை ஏமாற்றி கடன் தருவதாக கூறி கடனை தராமல் அவர்களிடம் பணத்தை கரந்துள்ள விவரம் போலீசுக்கு தெரிந்து அவர்கள் இருவரையும் சைபர் க்ரைம் போலீசார் பொறி வைத்து பிடித்தார்கள் பிறகு அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் ,அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் ஏமாற்றிய அமெரிக்கர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன

இதையும் படிக்கலாமே: அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள சத்குரு மோட்டார் சைக்கிளில் பயணம்!

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa