உலக சுகாதார அமைப்பின் தலைவரை சீனா விலைக்கு வாங்கியது- அமெரிக்கா குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பின் தலைவரை சீனா விலைக்கு வாங்கியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில், அரசு சாரா கூட்டத்தில் மூன்று பிரிட்டன் எம்.பிக்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசினார். அப்போது, உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோமை சீனா விலைக்கு வாங்கியது உளவுத்துறை ஆய்வின் மூலம் தெரியவருவதாக பாம்பியோ பேசியதாக கூறப்படுகிறது.

Tedros Adhanom

கூட்டம் ரகசியமாக நடைபெற்றதால் அதில் பங்கேற்ற பிரிட்டன் எம்.பிக்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. டெட்ரோஸ் அதனோம் வெற்றி பெற சீனா உதவியதாகவும், உலக சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையை கருதியே அதில் இருந்து அமெரிக்கா வெளிவந்ததாகவும் பாம்பியோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பாம்பியோவின் பகீர் குற்றச்சாட்டுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு திறம்பட கையாளவில்லை எனவும், சீனாவுக்கு சாதகமாக செயலாற்றி உண்மைகளை மறைத்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa