கமலா ஹாரிஸ் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்!

Man

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Man arrested outside Kamala Harris' home with gun, ammo | WOAI

அமெரிக்க துணை அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான, வாஷிங்டன் நகரில் உள்ள தி நேவல் அப்சர்வேட்டரியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதனால் கமலா ஹாரிஸ் தற்போதைக்கு வெள்ளை மாளிகையில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிளேயர் மாளிகையில் கணவர் டக்ளஸ் எம்.ஹாப் மற்றும் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் பிளேயர் மாளிகைக்கு வெளியே நேற்று முன்தினம் ஒருவர் துப்பாக்கி, வெடிபொருள் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கமலா ஹாரிஸ் இல்லத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லை

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் கமலா ஹாரிஸ் வீட்டை சுற்றித்திரிந்த நபரை கைது செய்து வாஷிங்டன் பெருநகர போலீசார் வசம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.