ட்விட்டரில் ட்ரெண்டாகும் #IStandWithKamala

Kamala Harris

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பெயரை பிரச்சாரத்தின்போது குடியரசுக் கட்சி செனட் எம்பி ஒருவர் தவறாக உச்சரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொந்தளித்த அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரில் I stand with kamala harris என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Kamala-mala-mala? Whatever”: Senator mispronounces Kamala Harris' name at Trump rally - The Hindu

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதேபோல் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஜார்ஜியாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி செனட் எம்பியான டேவிட் பெர்டியு (DAVID PERDUE ), கமலா ஹாரிசின் பெயரை தவறாக உச்சரித்து கேலி செய்தார். KAH’-mah-lah? Kah-MAH’-lah? Kamala-mala-mala? இது என்ன பெயர்? இவர் யாரென்று எனக்கு தெரியாது என நகைத்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்திய வம்சாவளிகள், மை நேம் இஸ் (my name is )என ட்விட்டரில் ஹேஷ்டேக் தொடங்கி, அவரவர் பெயரை அர்த்தத்துடன் பதிவிட்டு, அதில் I stand with kamala என பதிவிட்டு டேவிட் பெர்டியுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்க நாடாளுமன்றத்தை அலங்கரிக்கவுள்ள இந்தியர்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter