செவ்வாய்க்கு செல்லும் “விடாமுயற்சி” ரோவர்! சாதனை பயணத்தில் நாசா!!

செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியுமா? என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதத்தில் அமெரிக்காவின் நாசா அமைப்பு செவ்வாய் கோளில் மீண்டும் ஆய்வு செய்யவுள்ளது

நிலவுக்கு மனிதனை அனுப்பிய நாசா, செவ்வாய்க் கோளில் காலடி தடத்தை பதிப்பதை கனவு திட்டமாகக் கொண்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி வரும் அந்த அமைப்பு, சிவப்புக் கோளில் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தால் CURIOSITY என்ற ரோவரை செவ்வாய்க்கு ஏவி ஆய்வு செய்தது. அடுத்ததாக “விடாமுயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்க உள்ளது.

Perseverance rover

ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து வருகிற வியாழக்கிழமை காலை 7 மணி 50 நிமிடத்திற்கு ரோவர் ஏந்திய விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. சுமார் 7 மாதங்கள் பயணத்திற்குப் பின் பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்தை இந்த விண்கலம் அடையம். ரோவரிலிருந்து பிரியும் ரோவர் நுண்ணுயிர்களின் வாழ்க்கை, கோளின் தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு, மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கவுள்ளது. 7 தொழிட்நுட்ப கருவிகளை கொண்டுள்ள ரோவரில், துல்லியமாக படம்பிடிக்கும் 23 அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று வேற்று கிரகத்தில் முதல் முறையாக பறக்கவுள்ளது.

Perseverance rover

விடாமுயற்சி ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சிறிய அளவிலான ஹெலிகாப்டர், நிமிடத்திற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் முறை இறக்கைகளை சுழற்றி உயரே பறந்து ஆராய்ச்சி செய்வதற்கான இடங்களை தேர்வு செய்யவுள்ளது. பூமியை விட காற்று மண்டலம் மிகக் குறைவாக உள்ள செவ்வாய் கோளில், ஹெலிகாப்டரை பறக்க செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதனை வெற்றிக்கரமாக செய்து காட்டும் முயற்சியில் பெருந்தொற்று காலத்தையும் பொருட்படுத்தாமல் இறங்கியுள்ளது ரோவரை வடிவமைத்துள்ள JET PROPULSION LABORATORY. INGENUITY அதாவது புத்திக் கூர்மை என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர், செவ்வாய் வெளியில் பறந்து சாதனை படைக்கவுள்ளது.

இதையும் படிக்கலாமே: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: ட்ரம்ப் VS ஜோபிடன்! விவாதம் எப்போது?