அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்

Neera Tanden

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர் என்ற முக்கிய பொறுப்பு நீரா டாண்டெனுக்கு (neera tanden) வழங்கப்பட்டது.

Neena Tarden, senate hearing

அவருடைய நியமனத்துக்கு செனட் சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பைடனின் சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சி, எம்.பிக்களே நிராவின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நீரா டாண்டெனின் பரிந்துரையை வாபஸ் பெற்ற அதிபர் பைடன், வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் நீரா இடம் பெறுவார் என தெரிவித்தார்.

அதன்படி தற்போது அமெரிக்க அதிபர் பைடனின் மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகராகவும் நீரா டாண்டென் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.