நியூயார்க்கில் ஒரு சிறிய தீவு!

Little Island

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், லிட்டில் ஐஸ்லேண்ட் என்ற பெயரில் பிரமாண்ட மிதக்கும் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

ஹூட்சன்((Hudson)) ஆற்றின் மேல் சுமார் 7 ஆண்டுகளாக அமைக்கப்பட்டுவந்த இந்த பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவின் ஓரத்தில், ஹூட்சன் நதியை கண்டு ரசிக்கும்படி, 687 இருக்கைகள் கொண்ட ஆம்பிதியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் முடங்கிக்கிடந்த அமெரிக்க மக்கள், பூங்காவில் முகாமிட்டு, இயற்கை காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளனர்.

Little Island, a New $260 Million Charmer, Opens on the Hudson - The New  York Times

260 மில்லியன் டாலர் செலவில் இந்த லிட்டில் ஐஸ்லேண்ட் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 132 கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் உற்சாகமாக உருண்டு பிரண்டு விளையாடும் விதத்தில் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 350 வகையான வண்ண பூச்செடிகள் பூங்காவை சுற்றிவைக்கப்பட்டுள்ளன.

மன்ஹாட்டனின் மீட்பேக்கிங்கில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது கட்டிடக்கலை நிறுவனமான எம்.என்.எல்.ஏ.வின் தாமஸ் ஹீதர்விக் மற்றும் சிக்னே நீல்சன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.

மன்ஹாட்டனுடன் ஒரு நடைபாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த பூங்காவை பார்க்கும்போது ஒரு சிறிய தீவுக்கு சென்ற அனுபவம் கிடைப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.