உலகிலேயே இந்திய பெண்கள் தான் கவர்ச்சியற்றவர்கள் – அமெரிக்க முன்னாள் அதிபர்

Richard Nixon

அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் இந்திய பெண்களை அவதூறாக பேசும் உரையாடல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை அதிபராக பதவி வகித்தவர் ரிச்சர்டு நிக்சன். இவர் அமெரிக்காவின் 37 ஆவது அதிபராவார். நிக்சன் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவராவார்.

இவர் இந்திய பெண்களை பற்றி ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய ரகசிய டேப்பை முன்னாள் அதிபர் நிக்சனின் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் வெளியிடப்பட்டுள்ளது.

காரணம் அதிபர் ட்ரம்ப் இனவெறுப்புடன் நடந்து வருவதாகவும், கறுப்பினத்தவர்களுக்கு எதிராகவும் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துவருவதுடன், அமெரிக்காவில் போராட்டங்களும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.

Richard Nixon

இந்த சூழலில் அதிபர் ட்ரம்பை விட அமெரிக்க அதிபர் நிக்சனும், பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கரும் அதீத இனவெறுப்புடன் நடந்து கொண்டதாகவும், அது தொடர்பான சான்றுகள் அந்த ரகசிய உரையாடலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியர்களை ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களுடன் ஒப்பிட்டு நிக்சன் பேசியதாக கூறப்படுகிறது.

அதாவது ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் உள்ளது. ஆனால் இந்தியர்கள் மிகவும் பரிதாபகரமானவர்கள் என நிக்சன் விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் இந்தியா சோவியத் யூனியனுடன் நெருக்கமாக இருந்ததால் இந்தியர்களுக்கு எதிராக நிக்சன் செயல்பட்டதாக தெரிகிறது, உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள் என்றும் பாலுணர்வு அற்றவர்கள் என்றும் நிக்சன் ஆபாசமாக பேசியுள்ளார்.

இத்தகைய இந்திய பெண்கள் எப்படி பிள்ளை பெறுவார்கள் என்றும் நிக்சன் பொதுவெளியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிபர் தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழலில், நிக்சனின் இந்த பேச்சுக்கள் அடங்கிய டேப் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக நடந்த படகுகள் அணிவகுப்பில் விபத்து!

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa