ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழப்பு!

covid-vaccine

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருந்தது.

அந்த சூழலில் தான் அமெரிக்காவின் பெல்ஜியத்தில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

பைசர், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் போட வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் தடுப்பூசியை ஒரே டோஸ் போட்டுக்கொண்டால் போதும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 முதல் 48 வயதிலான ஆறு பெண்களுக்கு ரத்தம் உறைந்து இரத்தக்கட்டிகள் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த தடுப்பூசி பயன்பட்டை நிறுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும், அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களும் தடுப்பூசி முகாம்களுக்கு அறிவுறுத்தியுள்ளன

US Regulators Recommend "Pause" On J&J Vaccine Over Rare Blood Clots

இந்நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார்.

ஒரிகான் மாகாணத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 50 வயதாகும். கடந்த இருவாரத்திற்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழந்த ஆறு பெண்கள் 18 முதல் 50 வயதுடையவர்கள் ஆவர். ஒருவர் மட்டும் 60 வயதுக்குட்பட்டவராவார்.