மிஸ்டர்… ரொம்ப பேசாதீங்க… உங்க வேலையை நீங்க பாருங்கள்! ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த மேயர்

Ted Wheeler

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலானரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ள சூழலில், வாஷிங்டனைச் சேர்ந்த, ‘பேட்ரியாட் பிரேயர்’ அமைப்பினர், ஓர்கான் மாகாணம், போர்ட்லாண்டிற்கு சென்று அதிபர் ட்ரம்புக்கு ஆதாரவாக பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கு எதிராக, ஜனநாயக கட்சியினர் குரல் கொடுத்ததை அடுத்து, இரு குழுவினருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லாண்டில் இருந்து வெளியேறினர். இதனிடையே போர்ட்லாண்டில், ட்ரம்ப் ஆதரவாளரான, ஆரன் ஜே டேனியல்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இரங்கல் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், ‘வன்முறையை வளர விட்டு வேடிக்கை பார்க்கும் போர்ட்லாண்ட் மேயர் ஒரு முட்டாள்’ என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள போர்ட்லாண்ட் மேயர், “அதிபர் ட்ரம்ப் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசியுள்ளார். அதிபர் ட்ரம்ப் அவர்களே, உங்களின் அடாவடி குணம் எதற்குமே தீர்வாகாது. நான், உங்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகிறேன். ஆனால், உங்கள் பேச்சு அதற்கு உதவாது. நான் என் பணியை செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்: கமலா ஹாரிஸ்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa