Hollywood அடையாளத்தை மாற்ற முயன்ற விஷமிகள் கைது

hollywood

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஹாலிவுட் ஒன்றாகும். இந்நிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த லேண்ட் மார்க் இருக்கும் மலையின் மீது ஏறி Hollywood என்ற இடம் அருகே w மற்றும் d எழுத்தை மறைத்து B வடிவில் நின்று “Hollyboob” என்று வரும் வகையில் ஒரு துணியை போர்த்தியுள்ளனர்.

Hollyboob

இதுப்பற்றி தகவல் அறிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். விசாரணையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் மற்றும் ஐந்து ஆண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. ஆனால் Hollywood அடையாளத்திற்கு நிரந்தர சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.