அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 9 கோடி பேர் வாக்களிப்பு!

Election

அமெரிக்கா அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு இம்முறை முன்கூட்டியே வாக்களிக்கும் முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்கா அரசமைப்பு சட்டப்படி , 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்கிழமையில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. எனினும் முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் தேர்தல் நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.

தபால் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்றோ அமெரிக்கர்கள் முன்கூட்டியே தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற முடியும்.

voting

கடந்த சில ஆண்டுகளாகவே முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று அச்சம் நீடிப்பதால் இதுவரை இல்லாத அளவு அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துகின்றனர்.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 9 கோடியே பேர் தங்களின் வாக்கினை பதிவு செய்துள்ளனர். டெக்சாஸ், ஹவாய் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் முக்கால்வாசி பேர் முன்கூட்டியே ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டனர்.

இந்த எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 67 விழுக்காடாகும்.

இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என இன்னும் தீர்மானிக்காத வாக்காளர்களை கவர ட்ரம்பும், பிடனும் தீவிர இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் அவரவர் குடும்பத்துடன் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர்.

குறிப்பாக கருப்பினத்தவர்களே அதிகளவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு; 700 பேர் பலி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter