உருகி விழுந்த ட்ரம்ப் சிலை! நடந்தது என்ன?

Ice Sculptures

அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாட்டு அதிபர்களின் பனிச்சிற்பங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் அருகே வைத்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் உச்சிமாநாடு, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரேசில் அதிபர் போல்ஸனாரோ ஆகியோரின் பனிச்சிற்பங்கள், கிழக்கு நதிக் கரையில் நிறுவப்பட்டது. இவ்விரு நாடுகளிலும் பல்லுயில் சூழலை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிலைக்கு நடுவே தன்னார்வலர்கள் ஏந்தியிருந்தனர். அப்போது இரு பனிச்சிற்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருகியது. ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபரின் சிலை உருகி விழுந்து, உடைந்து விட்டது.

அழிவின் விளிம்பில் உலகம் உள்ளதை தலைவர்கள் உணர வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த சிலைகளை நிறுவியிருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் அழிந்துவருகின்றன. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் கடந்த 2017 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகினார். உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டில் பங்கேற்காத நான்கு ஐ.நா. உறுப்பு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது. இதேபோல் பிரேசிலில் போல்சனாரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து காடழிப்பு அதிகரித்ததையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அழிக்கப்பட்டுவருவதையும் பல்லுயிர் உச்சிமாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையும் படிக்கலாமே:  ட்ரம்புக்கு கொரோனா! தலைகீழாக மாறும் அமெரிக்க அரசு!!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter