அதிபர் ட்ரம்புக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் சிலைகள்!

Statue

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக பொது இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.

குடியுரிமை மற்றும் அமெரிக்கர்களின் சுதந்திரத்தைப் பறித்தவர் என எழுதப்பட்ட பீடத்தில் அதிபர் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை தத்ரூப சிலைகளாக வடித்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதேநேரம் அதிபருக்கான தேர்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மனிதர்களை சிலைகளைப் போல நிற்க வைத்து ’fill that seat’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு பல்வேறு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் தாக்கும்போது கையில் பைபிளை வைத்துக் கொண்டு ட்ரம்ப் வேடிக்கை பார்ப்பது போலவும், உச்ச நீதிமன்றத்தில் காலி இடத்தை நிரப்புமாறு எழுதப்பட்ட பீடத்தில் ட்ரம்ப் திரும்பி நின்று சிறுநீர் கழிப்பது போலவும், கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு செல்ல சொல்லி ட்ரம்ப் அறிவுறுத்துவது போலவும் உருவாக்கப்பட்டுள்ள சிலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதுபோன்ற சிலைகள் அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளை அமெரிக்கர்களுக்கு நினைவுப்படுத்துவது போன்று அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:  துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter