அமெரிக்காவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு இறுக்குப் பிடி! ஹவாய் நிறுவனத்துக்கு செக்…

Huawei

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயின் 38 துணை நிறுவனங்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில், அவற்றின் மீதான பிடியை இறுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும் வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் கொரோனா தொடர்பான உண்மையை சீனா மறைத்ததே உலகலாளவிய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்காவிலுள்ள சீன தூதரகத்தை மூடுமாறும், சீனாவுடன் இனி எந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பமில்லி என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

Huawei

இந்நிலையில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயின் 38 துணை நிறுவனங்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில், அவற்றின் மீதான பிடியை இறுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் கருவிகள் மூலம் அந்நாட்டு சட்டத்தைப் பயன்படுத்தி மாற்றுச் சிப் மற்றும் ஆஃப்-தி-ஷெல்ஃப் எனப்படும் ஓடிஎஸ் சிப்ஸ்களை சீனாவின் ஹவாய் நிறுவனம் தயாரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி தயாரிப்பு விதியின் கீழ் எடுக்கப்படும் இந்நடவடிக்கையின்படி அமெரிக்காவில் இயங்கும் ஹவாயின் 38 துணை நிறுவனங்கள் மீதான பிடியைஇறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், அமெரிக்க வர்த்தகத்துறை ஹவாய் நிறுவனத்தின் தற்காலிக பொது உரிமம் காலாவதியாகவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றியைத் திருட முயற்சி செய்கின்றனர்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa