இந்தியா உலகசக்தியாக உருவெடுக்க உதவி செய்வோம்: அமெரிக்கா சூளுரை

india- us relationship

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப். எனப்படும் அமெரிக்க – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில் இந்திய அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

NarendraModi

மாநாட்டில் பேசிய ஸ்டீபன் பீகன், “உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த 20 ஆண்டுகளில் வலிமை பெற்றுள்ளது.

உலகிற்கே பாதுகாப்பு வழங்கும் நாடாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு அமெரிக்கா அத்துணை உதவிகளையும் செய்யும். ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறை வளர்ச்சிக்கும் இந்தியா அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருக்கும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்கள், அமெரிக்காவுடனான நட்புறவை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினர்.
பயங்கரவாதத்தை எதிர்க் கொள்ளவும் இருநாடுகளுடன் ஒற்றுமையுடன் செயல்பட, இரு நாட்டு தலைவர்களும் விரும்பினர். சீனாவுடனான உறவு மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வதிலும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே சித்தாந்தத்தையே கடைப்பிடித்தன.

அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியா- அமெரிக்கா இடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் ஆர்வமாக உள்ளனர்.” எனக் கூறினார்.

இந்திய அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதி நாளான நாளை இரவு 9 மணிக்கு மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து உரையாற்றவுள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதளபாதாளத்தில் ஜிடிபி!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page

http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
-https://twitter.com/tamilmicsetusa