ட்விட்டரில் அதிக பதிவுகள் வெளியிட்டு ட்ரம்ப் சாதனை

ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக பகிரப்பட்ட மற்றும், அதிக லைக்குகளை வாங்கிய பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, நடப்பாண்டில் அதிக லைக்கள், அதிக ரீட்விட்டுகள், அதிக quote-களை பெற்ற பதிவுகள், அதிகம் பகிரப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்ட மற்றும், அதிக லைக்குகளை வாங்கிய பதிவாக அமெரிக்க நடிகரும் “பிளாக் பாந்தர்” என்று சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் சாட்விக் போஸ்மேன்னின் இறப்பு செய்தி இடம்பிடித்துள்ளது.

அதேபோல் நடப்பு ஆண்டில் ட்விட்டரில் அதிக பதிவுகளை வெளியிட்டு சாதனை படைத்தவர் என்ற பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தட்டி சென்றுள்ளார்.

trump

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அவர், ஏராளமான பதிவுகளை பதிவிட்டதும், பைடன் குறித்த குற்றச்சாட்டுகளை ட்விட்டர் வழியாக பதிவிட்டதுமே இதன் முக்கிய காரணமாகும்.

முன்னதாக அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு அவரை பின் தொடர்ந்த 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் ட்ரம்ப்பை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.

2020-ஆம் ஆண்டின் அதிக ட்விட்டுகளை பெற்ற இசை அணியாக தென் கொரியாவின் 7 பேர் கொண்ட “பாய் பேண்ட்” இசை குழு தொடர்ந்து 4-வது முறையாக தேர்வாகி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பதிவிட்ட , கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட்டின் இரங்கல் செய்தி ட்விட்டரில் அதிக மறுபதிவு மற்றும் லைக்குகளை பெற்ற 2-வது பதிவாக தேர்வாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் 128 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter