ட்ரம்பின் பொய் பிரச்சாரங்களால் அமெரிக்க மக்களின் ரூ.380 கோடி வரிப்பணம் வீண்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொய்யான பரப்புரைகளால் அமெரிக்க மக்களின் ரூ.380 கோடி மதிப்பிலான வரிப்பணங்கள் வீணாகிவிட்டதாக வாஷிங்டன் பத்திரிக்கை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017, ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக அரியணை ஏறினார் மிகப்பெரிய தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்..

நான்காண்டு காலம் அமெரிக்கா அதிபராக பல சர்ச்சைகளையும் சவால்களையும் எதிர்கொண்டார். தொழிலதிபராக வெற்றி கண்ட ட்ரம்பால் மக்கள் பிரதிநிதியாக சரிவர இயங்கமுடியவில்லை.

சர்வதேச அரசியலை கையாண்ட விதம் கொரோனா தொற்றை எதிர்கொண்ட போக்கு இவை எல்லாம் ட்ரம்புக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கை குறைத்து விட்டது.

விளைவு தேர்தலில் ஏற்பட்ட தோல்வி. ஆனால் இதுவரை தான் தோல்வி அடைந்ததை ட்ரம்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது தவிர ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் அவர் மீது மேலும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

Trump

இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிய பொய்யான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அரசு அமைப்புகள் தினமும் செலவிட்ட தொகைக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், எந்த பலனும் இல்லாத சட்ட வழக்குகளை தொடரவும், தேர்தல் அலுவலர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ட்ரம்ப் அதிகளவு தொகையை செலவழித்தது தெரியவந்துள்ளது.

இந்த தொகை மக்களின் வரிப்பணம் என்றும், இதுவரை 380 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருப்பதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து ஏற்படுத்திய சேதங்களும் ஏராளம்.

அமெரிக்க பாதுகாப்புக்காக தேசிய பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் ஏராளமான தொகை செலவிடப்பட்டதாக தெரிகிறது.