5 மாநிலங்களில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இழுபறி!

trump vs joe biden

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுவரும் சூழலில், 5 மாநிலங்களில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இழுபறி நீடித்துவருகிறது.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு 264 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலை நீடிக்கிறது.

வாக்குகள் எண்ணப்பட்டுவரும் மாநிலங்களில் நவேடாவில் மட்டுமே பைடன் முன்னிலையில் உள்ளார்.

Trump Falsely Claims Victory With Election Too Close to Call

நவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் உள்ளது. இந்தநிலையில் முடிவுகள் அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களில் கூடுதல் வாக்குகளை பெற்று ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.

ஜார்ஜியாவில் இருவருமே 49.4சதவீத வாக்குகளை பெற்று சமநிலையில் உள்ளனர்.

அதிகபட்சமாக பென்சில்வேனியாவில் 20 தேர்தல் சபை வாக்குகளும், ஜார்ஜியாவில் 16 மற்றும் வடகரோலினாவில் 15 வாக்குகளும் உள்ளன.

நெவாடாவில் 6 தேர்தல் சபை வாக்குகள் உள்ள நிலையில் இங்கு ட்ரம்ப் 48.5% வாக்குகளும் பைடன் 49.43% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இங்கு பைடன் வெல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 16 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட ஜார்ஜியாவில் இரு வேட்பாளர்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்புமே தலா 49.4% வாக்குகளை பெற்றுள்ளன.

ட்ரம்ப் வெறும் ஆயிரத்து 200 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார். இங்கு சொற்ப வாக்குகளே எண்ணப்பட வேண்டியிருப்பதால் விரைவில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட மிக முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவில் 49.56% வாக்குகளை பெற்று ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.

பைடன் 49.29% வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார். இங்கு இன்னும் சுமார் 5 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்புள்ளது.

11 தேர்தல் சபை வாக்குகள் உள்ள அரிசோனாவில் பைடன் 50.1% வாக்குகளுடனும் ட்ரம்ப் 48.5% வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர். இங்கும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.

நார்த் கரோலினா மாநிலத்தில் ட்ரம்ப் 50.09% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பைடன் 48.69% வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார். இங்கு 70 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.

இங்கு 15 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் 5 மாநிலங்களில் மூன்றில் ட்ரம்ப்பும் இரண்டில் பைடனும் முன்னிலையில் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே: தேர்வு முடிவை மாற்றுவாரா ட்ரம்ப்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter