”பொய்யில் புலவர்” 30,573 பொய்களை பேசிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் 30,573 பொய்கள் பொதுவெளியில் பேசியுள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். அவர் பதவி ஏற்று சத்திய பிரமாணம் செய்து உதிர்த்த முதல் வார்த்தையில் தொடங்கி பொய்களையே மூலதனமாக கொண்டே ட்ரம்ப் செயல்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அடிக்கடி தோன்றி சாதனை, பொய், மழை, கொரோனா வைரஸ், எதிர்க்கட்சிகளின் மீதான குற்றச்சாட்டு, தேர்தல் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் அதிபர் ட்ரம்ப் ஏராளமான பொய்யை அள்ளி வீசியுள்ளார்.

Trump’s

முதலில் ட்ரம்ப் பேசிய பொய்யை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க மக்கள் போக போக ஏற்றுக்கொண்டனர். பல ட்வீட்களையும், பிரச்சாரத்தின்போதும் ட்ரம்ப் பொய்களை அடுக்கடுக்காக கூறியுள்ளார்.

குறிப்பாக தேர்தல் நேரத்தில் அதாவது கடைசி 5 மாதங்களில் அதிபர் ட்ரம்ப் தெரிவித்த, பொய்யான தகவல்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தை கடந்துள்ளது. அவர் பதிவு செய்யும் பொய்யான ட்வீட்களை நீக்குவதையே ட்விட்டர் நிறுவனம் ஒரு வேலையாக வைத்திருந்தது.

கொரோனா வைரஸ் குறித்தும், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் ட்ரம்ப் கூறிய பொய் அமெரிக்காவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் அவர் பொய்யாக பதிவிட்ட ட்வீட்டே கடந்த 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.