அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனுக்கு கொரோனா!

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 33 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது.

 Robert O’Brien

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்ய்ள்ளது. 54 வயதான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரைனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என்றும் அங்கிருந்தே தனது பணிகளை தொடர்வார் என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலமாக அதிபருக்கோ அல்லது துணை அதிபருக்கோ தொற்று பரவும் அபாயமில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் 10இல் ஒருவர் உணவின்றி தவிப்பதாக ஆய்வில் தகவல்!