செப்.15 க்குள் டிக்டாக்கின் செயல்பட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்காவிடில் வெளியேற வேண்டும்: ட்ரம்ப்

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது.

அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.

சீனாவின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்ததையடுத்து அமெரிக்காவிலும் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தனர்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் செயலி மூலம் சீனா திருடுவதாகவும் குற்றஞ்சாட்டினர். ஏற்கனவே இந்திய பயனர்களை இழந்த டிக்டாக், அடுத்து அமெரிக்க பயனர்களையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தனது நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க டிக்டாக் முடிவு செய்தது.

இந்த திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்குவது தொடர்பான உத்தரவு ஒன்றை ட்ரம்ப் பிறப்பித்திருக்கிறார்.

அதில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக உள்ளது.

அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்தப்படுகிறது.

எனவே 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும்” எனக் கெடு விதித்திருந்தார். இந்த கெடு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவடைகிறது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 மடங்கு அதிகம்! ஆய்வில் பகீர் தகவல்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

Twitter