நான் ரொம்பவே தேசப்பற்று மிக்கவன்!- அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் முகக்கவசம் அணிய வற்புறுத்தாதீர்கள், முகக்கவசம் அணிவதும் அணியாமல் இறுப்பதும் தங்களின் தனிப்பட்ட விருப்பம் என அந்நாட்டு மக்கள் முகக்கவசம் அணிய அடம்பிடித்துவருகின்றனர். அதற்கு அதிபர் ட்ரம்பும் ஆதரவு தெரிவிப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. முகக்கவசம் அணிவதால் நோய் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என முரண்பாடான கருத்துக்களை அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில் தனிமனித இடைவெளியும், முகக்கவசம் அணிவதே நோய் பரவலை தடுக்க ஒரே வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்தே மாஸ்க் போடாத ட்ரம்ப் கடந்த வாஷிங்டனில் ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை சந்திக்க சென்றபோது முதன்முறையாக முகக்கவசம் அணிந்து சென்றார்.

இந்நிலையில், முகக்கவசம் அணிவது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், “நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத சீன வைரஸை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாதபோது முகக்கவசம் அணிவதுதான் தேசபக்தி என்று பலர் கூறுகிறார்கள். அப்படி என்றால் என்னை விட தேசபக்தி யாரும் இல்லை, நான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான அதிபர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa