ட்ரம்ப் எதுக்கு தேர்தலில் நிற்கிறார் தெரியுமா? ஒபாமா பதில்

obama

ட்ரம்ப், தமக்கும் தமது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

obama

டொனால்டு ட்ரம்ப், தமக்கும் தனது பணக்கார நண்பர்களுக்கு உதவிடவும் தான் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விமர்சித்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் (Joe Biden) ஜோ பிடனை ஆதரித்து ஃப்ளோரிடா மாகாணம் மயாமியில் பேசிய ஒபாமா, சராசரி அமெரிக்கர்கள் மீது ட்ரம்ப்புக்கு பச்சதாபமும், அக்கறையும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

அதேவேளையில் ஜோ பிடனும் கமலா ஹாரிஸூம் அவர்களுக்காக தேர்தலில் நிற்கவில்லை, சாதாரண மக்களுக்காகத்தான் போட்டியிடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

ஜோ பிடனும் கமலா ஹாரிஸூம் அமெரிக்கர்களுக்காக கவலைப்படுவர், அவர்களுக்கு வாக்கு செலுத்தாதவர்கள் மீது அக்கறை காட்டுவர் என்று பாரக் ஒபாமா தெரிவித்தார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் டொனால்டு ட்ரம்ப்பிடம் எந்தத் திட்டமும் இல்லாத காரணத்தால் தான் ஒரு நேர்காணலில் இருந்து அவர் வெளியேறியதாக ஒபாமா விமர்சனம்  செய்தார்.

இதையும் படிக்கலாமே:  துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter