ட்ரம்புக்கு நேர்ந்த கொடூரம்!

அமெரிக்க முன்னாள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது மிக ஆபத்தான நிலையில் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் முந்தைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முகக்கவசம் அணியாமலேயே சுற்றிவந்தார்.

அதன் விளைவாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ட்ரம்புக்கும், அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மெலானியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஆனால் சிகிச்சைக்கு நடுவே ட்ரம்ப் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க மக்களுக்கு அதுவரை அளிக்கப்படாத பரிசோதனை முயற்சியான மருந்துகளை ட்ரம்புக்கு அளிக்க அந்நாட்டு மருத்துவர்கள் முன்வந்தனர்.

Trump

வெள்ளை மாளிகையில் இருந்து ராணுவ மருத்துவமனைக்கு ட்ரம்ப் கொண்டு செல்லப்படும் போது அவரின் ஆக்சிஜன் அளவு ஆபத்தான நிலையில் குறைந்ததாகவும், நிமோனியாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருக்கடியால் ட்ரம்ப் அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.