அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் மீண்டும் தடை!

Tiktok

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேர வீடியோ மூலம், திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக், அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் திருடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை 90 நாட்களுக்குள் விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிற்கு அதிபர் ட்ரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

ஆனால் டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திடம் டிக்டாக்கை விற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதால் அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட தடையில்லை என ட்ரம்ப் கூறினார். ஆனால் அந்நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன.

இதனால் அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவு படி நவம்பர் 12 ஆம் தேதிக்கு பின்னர் டிக்டாக் செயலி ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பென்சில்வேனியா மாகாண நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக வாஷிங்டன் மாகாண நீதிமன்றமும் ட்ரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் டிக்டாக் செயலி அமெரிக்காவில் முன்பு போல் செயல்பட தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் செயலியின் செயல்பாட்டை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிக்கலாமே: 10 ஆண்டுகளாக வருமானவரி கட்டாத அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter