அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயர் அடுத்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைபிரிங் என்பவர் ட்ரம்பின் பெயரை பரிந்துரைக்கும் விண்ணப்பத்தை நோபல் பரிசு வழங்கும் கமிட்டியிடம் வழங்கியுள்ளார். இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான மோதலில் சுமூக தீர்வு காண உதவியதற்காக ட்ரம்பின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே என்ன பிரச்னை?

இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் திர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டன. இதில் இஸ்ரேல் வெற்றிப்பெற்றது. இருப்பினும் அரபு நாடுகள் அவ்வப்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கில் ஈடுபட்டன. இஸ்ரேல் உடனான வர்த்தகம் உள்பட அனைத்து உறவுகளையும் துண்டித்தன. ஆனால் காலப்போக்கில் எகிப்தும், ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மேலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதித்தன. இதனால் இரு நாடுகளுக்குமிடையே எவ்வித உறவும், பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்- இஸ்ரேல் இடையேயான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது இரு நாடுகளிடையேயும் முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமரசம் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று நிகழ்வான இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு காரணமாக அதிபர் ட்ரம்ப் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்த்து கதறி அழுத சிறுமி!- வைரல் வீடியோ

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa