ஹூஸ்டன் சீனத் தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க அதிகாரிகள்!

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் பின்கதவு வழியாக அமெரிக்க அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நுழையும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பிரச்னை மோதல் காரணமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்தில் மூடுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

Chinese consulate

அந்தக் கெடு முடிவடைந்த நிலையில், அந்த தூதரகத்திற்குச் சென்ற அதிகாரிகள் குழு, முன்பக்கத் கதவை இழுத்துப் பூட்டியது. அதன்பின்னர் பின்பக்கத் கதவு வழியாக அவர்கள் உள்ளே சென்றபோது, நீங்கள் யார் என்று அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்காமல் அமெரிக்க அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அமெரிக்க அதிகாரிகள் குழு உள்ளே செல்வதற்கு முன்னரே சீனத் தூதரக பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகமும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் பதிலளிக்கவில்லை.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa